ஹட்டன், கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள தலவாக்கலை, சென்கிளேர் தோட்டத்தின் டெவோன் பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (20) இவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இந்த குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் பெப்ரவரி 08 ஆம் திகதி அன்று கம்பஹாவுக்குச் சென்றிருந்தபோது பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, அவரது குடும்பம் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தது.
அவர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 6 குடும்ப உறுப்பினர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களில் சென்க்ளேர் தமிழ் மகா வித்யாலயாவின் 10 ஆம் ஆண்டு மாணவரும் ஒருவரும் உள்ளடங்குகிறார். மூன்று பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
கம்பஹாவில் தொற்றிற்குள்ளான பெண்ணுடன், அந்த குடும்பத்தில் 7 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.