27.8 C
Jaffna
September 27, 2023
இலங்கை

ஆரம்ப தீர்மானம் வருத்தமளிக்கிறது!

யு.என்.எச்.சி.ஆரின் ஆரம்பத் தீர்மானத்தில் தமிழ் அல்லது தமிழர்கள் பற்றி எதுவும் குறிப்பிடாமை வருத்தம் அழிப்பதாக வவுனியாவில் கடந்த 1465 நாட்களாக தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான அமைதியான ஆர்ப்பாட்டத்தை கொழும்பு சார்ந்த செய்தி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்ததற்காக கண்டனம் தெரிவித்த அமெரிக்க தூதர் டெப்லிட்ஸினுக்கு நன்றி கூற விரும்புகிறோம். இது எங்கள் அமைதியான மற்றும் ஜனநாயக ஆர்ப்பாட்டத்தையும் போராட்டங்களையும் தொடர்வதற்கு ஊக்குவிக்கிறது.

சர்வதேச பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன பொறிமுறை ஆகியவற்றை உள்ளடக்கிய எங்கள் பரிந்துரைக்கப்பட்ட யு.என்.எச்.ஆர்.சி தீர்மானத்தின் கடிதத்திற்கு பதிலளித்த நாடுகளுக்கும், குறிப்பாக கனடா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு. நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்

யு.என்.எச்.ஆர்.சி அமர்வுக்கு முன்னதாக ஒரு அரசியல் தீர்வு குறித்து சிங்கள அரசாங்கத்துடன் பேசிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம். இது தமிழர்கள் சிங்களவர்களுடன் இணைந்து பணியாற்றலாம் என்பதை உலகிற்கு காட்டுகிறது. தமிழர்களுக்கு அமெரிக்கா அல்லது இந்திய தலையீடுகள் தேவையில்லை என்பதை அது வலியுறுத்துகிறது. இலங்கைக்கு எதிரான எந்தவொரு வலுவான தீர்மானத்தையும் நீக்குவதற்கான ஒரு பொறியே இது.சுமந்திரன் எப்போதுமே, அமெரிக்கா அல்லது இந்தியாவின் தலையீட்டில் தமிழர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதை மறைமுகமாக உலகுக்குக் காட்டும் முயற்சியையே முன்னெடுக்கிறார்.

யு.என்.எச்.சி.ஆரின் ஆரம்பத் தீர்மானம் ஐ.சி.சி மற்றும் வாக்கெடுப்பின் தேவையை நிவர்த்தி செய்யவில்லை என்பதில் நாங்கள் வருத்தப்படுகிறோம். அவர்களின் தீர்மானத்தில், தமிழ் அல்லது தமிழர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த தீர்மானம் தமிழர்களை சங்கடப்படுத்துகிறது மற்றும் இது பாதிக்கப்பட்டவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் எந்த மரியாதையும் கொடுக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தனது நினைவுக் குறிப்பில் ஐ.நா. எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க இயலாது என்று எழுதினார். ஐ.நாவின் முன்னாள் உதவி பொதுச்செயலாளர் சார்ல்ஸ் பெட்ரி கூட இலங்கையை தண்டிக்க ஐ.நா.வுக்கு தைரியம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டார்.

1465 நாட்களுக்கும் மேலாக தமிழர்களுக்கும் நமது தமிழ் அரசியல்வாதிகளுக்கும் நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் விஷயமே இது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை, அரசியல் தீர்வுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தமிழர்களுக்கு உதவ தலையிடுமாறு அழைப்பு விடுத்து வருகிறோம்.

ஐக்கியநாடுகள் போஸ்னியா விடயத்தில் அக்கறை கொள்ளாததால், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் தலையிட்டு, போஸ்னியரை இன அழிப்பிலிருந்து காப்பாற்றி, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் போஸ்னியர்களுக்காக ஒரு சுயராஜ்யத்தை உருவாக்க உதவியது.என்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘யாழில் புதிய மதுபானசாலைகள் வேண்டாம்’: ஏற்க மறுத்தது மாவட்ட அபிவிருத்திக்குழு!

Pagetamil

தாதியை கத்தரிக்கோலால் குத்திய வைத்தியரை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம்

Pagetamil

இலங்கையின் வரி வருவாய் குறைவு: சர்வதேச நாணய நிதியம் கவலை!

Pagetamil

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசு மரணம், மனைவியின் கர்ப்பப்பை அகற்றம்: கணவர் பொலிஸ் முறைப்பாடு!

Pagetamil

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் திகதி குறிப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!