அவுஸ்திரேலியன் ஓபனில் 9வது முறையாக ஜோக்கோவிச் சம்பியன்: 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்!

Date:

மெல்போர்னில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோக் ஜோக்கோவிச் 9வது முறையாக சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில்இன்று நடந்த இறுதிஆட்டத்தில் ரஷ்ய வீரர் டேனில் மெத்தவை வீழ்த்தி ஜோக்கோவிச் 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் நம்பர் வன் வீரர் நோவக் ஜோக்கோவிச்சை எதிர்த்து தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் மெத்மதேவ் களம் கண்டார்.

இறுதிஆட்டத்தில் முதல் செட்டே இருவருக்கும்இடையே கடும் போராட்டமாக அமைந்தது. டைபிரேக்கரில் சென்ற முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் மெத்மதேவ் வென்றார். முதல் செட்டே இருவருக்கும் இடையே 45 நிமிடங்கள் நடந்தது.

ஆனால், சுதாரித்துக் கொண்ட செர்பிய வீரர் ஜோக்கோவிச் அடுத்த இரு செட்களையும் 2-6, 2-6 என்ற செட்களில் எளிதாக வென்று சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இதன் மூலம் ஜோக்கோவிச் 9வது அவுஸ்திரேலியன் ஓபன் பட்டத்தையும், தொடர்ந்து 3வது முறையாக சம்பியன் பட்டத்தையும் வென்ற பெருமையைப் பெற்றார். ஜோக்கோவிச் தனது டென்னிஸ் வாழ்க்கையில் பெறும் 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இது அமைந்தது.

இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ரோஜர் பெடரரும், ரஃபேல் நடாலும் மட்டுமே பெற்றுள்ளனர். 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் ஜோக்கோவிச் 3வது இடத்தில் உள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

காலிமுகத்திடல் மின்கம்பத்தில் ஏறி போராடிய இளைஞன்!

"களனி விகாரையில் தியானம் செய்துவிட்ட வந்த போது நான் பொலிசாரால் கைது...

சர்ச்சைப் பிக்கு சிறைக்குள்ளும் சலசலப்பு!

கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...

உலகம் மிகவும் ஆபத்தானதாக மாறுகிறது: ரஷ்ய ஜனாதிபதி புடின்!

சர்வதேச நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், உலகம் மிகவும் ஆபத்தானதாகி வருவதாகவும் ரஷ்ய ஜனாதிபதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்