Pagetamil
இலங்கை

வெளிமாவட்ட பேருந்துகள் யாழ் வைத்தியசாலை வீதிக்குள் நுழைய தடை!

வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகள் யாழ்ப்பாணம் வைத்திய சாலை வீதியால் உள் நுழைவது வெளி செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

குறித்த பேருந்துகள் நேராக புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பஸ் தரிப்பிடத்திற்கு செல்ல வேண்டும். புதிய பஸ் தரிப்பிடத்தை இலங்கை போக்குவரத்து சபையும் தனியார் பஸ் உரிமையாளர்களும் பயன்படுத்த மறுத்து வந்த நிலையில் யாழ் மாநகர சபையால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம் முடிவானது யாழ்ப்பாணம் போக்குவரத்து போலீசாருக்கும் அறிவித்து இதனை மீறுபவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பேருந்துகள் வைத்திய சாலை வீதியை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டால் யாழ் நகரின் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைவடையும்.

எனவே அனைவரினதும் ஒத்துழைப்பை இது தொடர்பில் வேண்டி நிற்கின்றேன் என முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

தேசபந்துவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பாய்கிறது!

Pagetamil

கிளிநொச்சியை உலுக்கிய சிறார் துஸ்பிரயோக குற்றச்சாட்டு: புலிகள் அமைப்பிலும் இதே குற்றச்சாட்டை சந்தித்தவர்!

Pagetamil

மோடி- அனுர 15 நிமிடங்கள் தொலைபேசி உரையாடல்

Pagetamil

பிக்கு உடையில் தலதா மாளிக்கைக்குள் நுழைய முயன்ற மாணவன்!

Pagetamil

18 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

Pagetamil

Leave a Comment