24.1 C
Jaffna
February 27, 2021
குற்றம்

பேயோட்டியின் காதல்கள்: திருகோணமலை மாணவிக்கு நேர்ந்த கதி!

எவ்வளவுதான அறிவியல் வளர்ச்சியடைந்தாலும், மூட நம்பிக்கைகள் பலரது வாழ்க்கையை அழிக்கும் கதைகள் தொடர்ந்தபடியேதான் இருக்கிறது. சூனியம், பேயோட்டுதல் என அறிவியலுக்கு பொருந்தாத பலவித நம்பிக்கைகளும், வழக்கங்களும் இன்னமும் நாட்டின் பல பகுதிகளில் உள்ளது.

இந்த விபரீத நம்பிக்கைகள் ஏற்படுத்தும் விளைவுகளும் மோசமானவை.

அப்படியான ஒரு சம்பவமே இது.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில், சூரியபுர பொலிஸ் நிலையத்தில் 2020 டிசம்பர் 2ஆம் திகதி ஒரு முறைப்பாடு பதிவானது. 42 வயதான மல்லிகா பத்மகுமாரி என்ற பெண், தனது மகளை காணவில்லையென முறைப்பாடு செய்தார்.

15 வயதும் 10 மாதங்களையும் கொண்ட மகள் வீட்டிலிருந்து திடீரென காணாமல் போனதாகவும், வாகனத்தில் போனதை சிலர் கண்டதாகவும், அவரது தொடர்பு இல்லையென்றும் தெரிவித்தார்.

பொலிசார் நடத்திய விசாரணையில், மல்லிகாவுடனான முரண்பாட்டினால் கணவன் தனியே சென்று, ஹன்வெல்ல பகுதியில் குடியிருப்பது தெரிய வந்தது. கடந்த ஒக்ரோபர் மாதம் பாடசாலை விடுமுறைக்காலத்தில் தனது தந்தையின் வீட்டிற்கு சென்று ஒரு மாதம் அங்கேயே மாணவி தங்கியிருந்ததும் தெரிய வந்தது.

சிறுமியின் தந்தையிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்தப்பகுதிக்கு வந்து செல்லும் பேயோட்டியுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும்ஈ அண்மையில் ஒருநாள் மகள் தொலைபேசி அழைப்பேற்படுத்தி, பேயோட்டியுடன் வாழ விரும்புவதாக கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து, 2020 டிசம்பர் 10ஆம் திகதி சூரியபுர பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் மற்றொரு வழக்கை தாக்கல் செய்தனர். தமது மகளை சிலர் கடத்தி துஷ்பிரயோகம் செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பொலிசார் நடத்திய விசாரணையில் பேயோட்டியின் இரண்டு தொலைபேசி இலக்கங்கள் தெரிய வந்தது. அதனடிப்படையில் நடத்திய விசாரணையில், இரண்டு இலக்கங்களும் பெண்களின் பெயரில் பதிவாகியிருந்தது. முதல் பெண்ணிடம் நடத்திய விசாரணையில், பேயோட்டியின் வளர்ப்பு தாய் அவர். ஆனால் 2005ஆம் ஆண்டின் பின்னர் அவர் வீட்டுக்கு வருவதில்லையென்றும் கூறினார்.

அடுத்த பெண், பேயோட்டியின் முன்னாள் காதலி. தற்போது அவருடன் உறவில்லைனெ்றார்.

பொலிசார் நடத்திய விசாரணைகளில் பேயோட்டி பற்றிய மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, பேயோட்டியின் புகைப்படத்தை இந்த மாதம் 6ஆம் திகதி பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டது. தேசிய அடையாள அட்டை எண் 820903595 வி, சுபசிங்க அராச்சிகே ஸ்ரீ என்ற பெயருடைய 39 வயதுடைய நபர் பற்றிய தகவல்களை வழங்குமாறு கோரியிருந்தது.

இலத்திரனியல், அச்சு ஊடகங்களில், பேயோட்டியின் படத்துடன் செய்தி வெளியானது. 

உடுகோஹுவில பகுதியில் உள்ள ஒருவரிடமிருந்து ஹாலிஎல பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. தமது பகுதியில் படத்திலிருப்பதை போன்ற ஒருவரும், பெண்ணும் வாழ்வதாக தெரிவித்திருந்தார்.

ஹாலிஎல பொலிஸ் நிலையத்திலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அந்த கிராகமத்திற்கு 8ஆம் திகதி பொலிசார் சென்ற போது, பேயோட்டி அங்கிருக்கவில்லை. முதல்நாள் இரவு தொலைக்காட்சிகளிலும் அவரது படம் வெளியாகியிருந்ததால் அவர் இடத்தை காலி செய்திருந்தார்.

“ஒரு மாதத்திற்கு முன்பு 21 வயது திருமணமான பெண் என்று கூறிக்கொண்ட ஒரு பெண்ணுடன் அந்த மனிதர் இங்கு வந்தார். 3 வருடங்களின் முன்னர் பேயோட்ட எமது பகுதிக்கு வந்ததில் இருந்து அவருடன் அறிமுகமிருந்தது” என வீட்டு உரிமையாளர் தெரிவித்தாார்.

அவர் அங்கு தங்கியிருந்த போது நிறைய பணம் சம்பாதித்தது பொலிசாரின் விசாரணையில் தெரிய வந்தது. பேயோட்டல், மந்திர, தந்திரங்கள் என கிராமத்தில் நன்றாக உழைத்தார்.

பொலிசார் வரப்போவதையறிந்து, அவர் வீட்டை விட்டு தப்பிச் சென்ற போதிலும், அவரது மோட்டார் சைக்கிள் வீட்டிலிருந்து போலீசாரால் மீட்கப்பட்டது. தொடர் விசாரணையில், அவர் தலைமறைவாகயிருந்த வீட்டை பொலிசாரால் அடையாளம் காண முடிந்தது. இது இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அலுகொல்ல பகுதியில் உள்ள ஒரு வீடு. அவர் ஆறாயிரம் ரூபாய் வாடகைக்கு அந்த வீட்டிற்குச் சென்றிருந்தார்.

அன்றைய தினம் மதியமே, பேயோட்டியும், மாணவியும் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட இருவரையும் விசாரித்ததில், பதினைந்து வயது சிறுமி நான்கு மாத கர்ப்பிணியென்பது தெரிய வந்தது.

பேயோட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஏரியாவிற்கு ஒரு மனைவி போல பல பெண்களுடன் அவர் உறவில் இருப்பது தெரிய வந்தது.

ஹங்கமவில் முலான பகுதியில் பேயோட்டும் சாக்கில் ஒரு சிறுமியுடன் வாழ்ந்து துஷ்பிரயோகம் செய்துள்ளார். அது தவிர, யக்கல, கலஜெதிஹேன, மின்னேரியா பகுதிகளை சேர்ந்த வேறு 3 பெண்களுடனும் குடித்தனம் நடத்தியிருக்கிறார். அதில் ஒருவர் பட்டதாரி பெண். மின்னேரியா பெண்ணை சட்டபூர்வமாக திருமணம் செய்திருந்தார். பின்னர் விவாகரத்து பெற்றார். எனினும், குழந்தைகளிற்கான தாபரிப்பு பணத்தை வழங்காமல் தலைமறைவாக இருந்தார்.

இறுதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி குறித்து நடத்த விசாரணையில்,

“சில மாதங்களுக்கு முன்பு நான் ஹன்வெல்லவில் ஒரு வீட்டிற்கு பேயோட்டச் சென்றேன். அவர் அருகிலுள்ள வீட்டில் வசித்து வந்தார். நான் முதலில் பார்த்த போதே அவரைப் பிடித்து விட்டது.

பலர் என்னிடம் குறி கேட்டார்கள். அந்த சிறுமியும் குறி கேட்டார். அவரது கைரேகையை பார்த்து, அந்த சிறுமிக்கு அஞ்சனத்தைப் பார்க்கும் திறன் இருப்பதாகக் கூறினேன். பிரிந்திருக்கும் அவரது தாயையும், தந்தையையும் ஒன்றிணைப்பதற்கு, அந்த சிறுமிக்கு சில சடங்குகள் செய்ய வேண்டுமென கூறியிருந்தேன்“ என வாக்குமூலமளித்துள்ளான்.

மகளுக்கு சடங்கு செய்வதன் மூலம் மனைவியுடன் ஒன்றிணையலாமென நினைத்த தந்தையும் அதற்கு உடன்பட்டார்.

அன்று, இரவு சிறுமிக்கு பேயோட்டி சடங்கு செய்தான். அதாவது, அன்றிரவு சிறுமியை தனியறைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை துஷ்பிரயோகம் செய்தான்.

பின்னர் சிறுமி ஹன்வெல்லவிலிருந்து தாயாரிடம் சூரியபுரவுக்குச் சென்றார்.

சூரியபுர சென்றாலும், பேயோட்டியுடன் தொலைபேசியில் சிறுமிக்கு தொடர்பு ஏற்பட்டு விட்டது. இருவரும் தொலைபேசியில் காதல் ரசம் சொட்டினார்கள்.

ஒருநாள் சிறுமியை தொலைபேசியில் அழைத்த பேயோட்டி, “ஏன் வீட்டுக்குள் இருக்கிறீர்கள். உங்களை சந்திக்க முடியாமல் நான் சிரமப்படுகிறேன். ஒருமுறை சந்திப்போமா?“ என கேட்டுள்ளான்.

இந்த உரையாடல் வளர்ந்து, டிசம்பர் 2ஆம் திகதி தாயாருக்கு தெரியாமல் அவர் வீட்டிலிருந்து வெளியேறி, பேயோட்டியின் வாகனத்தில் ஏறி தப்பி சென்றார். அவர்கள் ஹாலிஎல பகுதிக்கு சென்று தங்கியிருந்தனர்.

சிறுமியை பல இடங்களிற்கும் அழைத்து சென்று தங்கியிருந்த போதும், அங்கெல்லாம் அவருக்கு 21 வயது என பேயோட்டி கூறியுள்ளான்.

சிறுமி மருத்துவ பரிசோதனைகளிற்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பேயோட்டியை சூரியபுர பொலிசாரிடம், ஹாலிஎல பொலிசார் ஒப்படைத்துள்ளனர்.


.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதால் இலங்கை இளைஞன் சிங்கப்பூரில் தற்கொலை!

Pagetamil

கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு!

Pagetamil

ஒன்றாக தீக்குளித்து உயிரை மாய்த்த இளம் ஜோடி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!