28.2 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இந்தியா

பாலியல் மருத்துவரிடம் போய் வந்ததால் வினை; கணவனை விசம் வைத்தே கொன்ற மனைவி!

கணவனுக்கு விஷம் வைத்து கொலை செய்ததாக கர்ப்பிணி மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். பாலியல் மருத்துவரின் பேச்சை கேட்டு மனைவியிடம் அடங்க மறுத்த மாப்பிள்ளைக்கு விசம் வைத்து கொன்றதாக அவர் வாக்குமூலமளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனி மைக்கேல் பாளையம் சாலை தோட்டப்பகுதியில் வசித்து வந்தவர் நந்தகுமார். இவருக்கு வீட்டோடு மூன்று ஏக்கர் விவசாய நிலம் இருந்தாலும் அருகில் உள்ள மாவு மில்லுக்கும் வேலைக்கு சென்று வந்தார். 35 வயது வரை திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் தவித்து வந்த நந்தகுமார் 7 மாதங்களுக்கு முன்பு மைதிலி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் வயிற்றுவலி என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நந்தகுமார், தான் சாப்பிட்ட உணவு கசந்ததாகவும் , தான் வயலுக்கு அடிக்க வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்து வாடை வீசியதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல நந்தகுமார் விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் உயிரிழந்தது உறுதியானது.

நந்தகுமாருக்கு பாய்சன் வைத்தது யார் என்ற கோணத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், அவரது கர்ப்பிணி மனைவி மைதிலி தான் இந்த படுபாதகச் செயலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த கொலைக்கான பின்னணியும் அம்பலமானது.

35 வயதான நந்தகுமாருக்கு, ஏற்கனவே 15 வயதில் திருமணம் முடிந்து கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த 20 வயது மைதிலி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்த நிலையில், ஆரம்பத்தில் நந்தகுமார் மனைவியுடன் தாம்பத்தியத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.

நண்பரின் ஆலோசனைப்படி பாலியல் மருத்துவர் ஒருவரை சந்தித்த நந்தகுமார், அவர் அளித்த மாத்திரைகளை வாங்கி சாப்பிட்ட பின் மைதிலி கர்ப்பமானதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இரவுபகலாக உறவிற்கு அதழைத்து தனக்குத் தொல்லை கொடுத்த கணவனின் செய்கையால் நொந்து போயுள்ளார் மைதிலி.

கணவனை ஒரேடியாகத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார் மைதிலி.

கடந்த 28ம் தேதி அன்று தோட்டத்தில் பயிர்களுக்கு மருந்து அடித்துவிட்டு வந்து காலை டிபடன் சாப்பிட வந்துள்ளார் மாப்பிள்ளை. சாப்பாடு கசப்பாகவே இருக்கவே அவர் மைதிலியிடம் கேட்டிருக்கிறார். அவர் சரியான பதிலை சொல்லாததால் பாதி சாப்பாட்டுடன் எழுந்து வேலைக்கு சென்றுவிட்டார் நந்தகுமார். கொண்டு சென்ற மதிய உணவும் கசப்பாக இருக்கவே அதை கீழே கொட்டிவிட்டார். ஆனால் உடலில் நிறைய மாற்றங்கள் வந்ததால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஓடினார். உடலில் விஷம் ஏறியிருப்பதாக சொன்ன டாக்டர்கள், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 15ம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இரு வேளையும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் நந்தகுமார் பரிதாபமாக பலியானது தெரியவந்தது. இதையடுத்து கர்ப்பிணி மனைவி மைதிலியை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினார்.

இரவு பகலாக உறவிற்கு அழைத்து தொல்லைப்படுத்தியதால் ஆத்திரப்பட்டு விசம் வைத்து விட்டேன் என மைதிலி கூறியிருக்கிறார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, கைது செய்யப்பட்ட மைதிலி, நந்தகுமாரை திருமணம் செய்து கொள்ளும் முன்பு உள்ளூர் இளைஞர் ஒருவருடன் தொடர்பில் இருந்தார். இதனால், முரட்டு சிங்கிளாக இருந்த நந்தகுமாருக்கு மைதிலியை அவரது பெற்றோர் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். மைதிலி தனது ரகசிய காதலனுக்காக கணவனுக்கு உணவில் விஷம் வைத்திருப்பார் என்று நந்தகுமாரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

No description available.

அதே நேரத்தில் மனைவியின் கர்ப்பகாலத்தில் பாலியல் மருத்துவரின் வீரியமான பேச்சைக்கேட்டு, அத்துமீறினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சாட்சியாக மாறி இருக்கின்றது இந்த கொலை சம்பவம்..!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“வாடகை மனைவி” முறை உள்ள ஊர்

east tamil

ம.பி.யில் நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது பெண் மாரடைப்பால் உயிரிழப்பு

Pagetamil

உலகமே ஏற்றுக்கொண்டாலும் பெரியாரை நான் தொடர்ந்து எதிர்ப்பேன்: சீமான் திட்டவட்டம்

Pagetamil

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது: உச்ச நீதிமன்றம் கருத்து

Pagetamil

இந்திய பாதுகாப்புப் படையினரால் 31 மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை

east tamil

Leave a Comment