26.8 C
Jaffna
December 10, 2024
Pagetamil
சினிமா

சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஓவியா

பா.ஜனதா சார்பில் போலீசில் அளிக்கப்பட்ட புகார் குறித்த சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சென்னை வந்தபோது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘கோபேக் மோடி’ என்ற ஹேஷ்டேக் உருவானது. அதில் நடிகை ஓவியாவும் மோடிக்கு எதிரான பதிவை வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியாவை பலர் கண்டித்தனர்.

நடிகை காயத்ரி ரகுராமும் “வாயை மூடு. உன்னை அவமதிப்பதற்கு எதுவும் இல்லை. இது தி.மு.கவின் திசை திருப்பும் வேலைதான். ஓவியாவை வேலைக்கு அமர்த்தி இதை செய்ய வைத்துள்ளனர்” என்று சாடினார்.

ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில், “ஜெய்ஹிந்த் கருத்து சுதந்திரம்” என்று பதிவிட்டுள்ளார்.

கருத்து சொல்ல உரிமை இருக்கிறது என்று எதிர்ப்பாளர்களுக்கு இதன் மூலம் பதிலடி கொடுத்து இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி ஓவியாவின் பதிவை வைரலாக்கி வருகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அதிவேகமாக ரூ.500 கோடியை வசூலித்த முதல் இந்திய படம்: அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ சாதனை!

Pagetamil

குருவாயூர் கோயிலில் நடைபெற்ற காளிதாஸ் ஜெயராம் – தாரிணி திருமணம்!

Pagetamil

புஷ்பா 2 Review: பாதியில் அணைந்து போன ‘ஃபயர்’!

Pagetamil

போதை பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது

Pagetamil

சின்னத்திரை நடிகர் நேத்ரன் மறைவு

Pagetamil

Leave a Comment