27.7 C
Jaffna
September 22, 2023
விளையாட்டு

அவுஸ்திரேலிய ஓபன்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா 2வது முறையாக பட்டம் வென்றார்!

மெல்போர்னில் நடந்து வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 2வது முறையாகச் சம்பியன் பட்டம் வென்றார்.

இதற்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டு அவுஸ்திரேலியன் ஒபனில் சம்பியன் பட்டத்தை ஒசாகா வென்றுள்ளார்.

மெல்போர்னில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர்பிரிவு இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஜெனிஃபர் பிராடியை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை ஒசாகா கைப்பற்றினார்.

ஒசாகாவுக்கு ஒட்டுமொத்தமாக 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டம், அவுஸ்திரேலிய ஓபனில் பெறும் 2வது பட்டமாகும்.

ஜப்பானில் பிறந்த ஒசாகா, தனது 3வது வயதிலேயே அமெரிக்காவுக்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்தார்.

23 வயதான ஒசாகா, கடந்த 2020ஆம் ஆண்டில் ஏ.பி. செய்தி நிறுவனத்தின் சிறந்த தடகள வீராங்கனைக்கான விருதை வென்றார். கடந்த சீசனில் தொடர்ந்து 21 போட்டிகளில் ஒசாகா வென்றுள்ளார். அதில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் சம்பியன் பட்டமும் அடங்கும். இதற்கு முன் 2018இல் யுஎஸ் ஓபனையும் ஒசாகா வென்றுள்ளார்.

இந்த ஆண்டில் நடந்த முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஒசாகா சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இந்தப் போட்டியில் பங்கேற்கபதற்காக அவுஸ்திரேலியாவுக்கு ஜனவரி மாதமே ஒசாகா வந்துவிட்டார். ஆனால், ஒசாகா பயணித்த விமானத்தில் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததால், ஒசாகா பயிற்சியில் ஈடுபடமுடியாமல் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்த தனிமைப்படுத்துதலுக்குப் பின்புதான் ஒசாகா பயிற்சியில் ஈடுபட்டு தற்போது சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

தொடக்கத்திலிருந்து தனது இயல்பான, வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒசாகா முதல் செட்டில் 4 கேம்களை விட்டுக்கொடுத்தார். அடுத்த செட்டிலும் 3 கேம்களை மட்டுமே கொடுத்து செட்டைக் கைப்பற்றினார். இந்த இரு செட்களிலும் 6 வலிமையான ஏஸ்களை வீசி பிராடியை திணறவிட்டார்.

ஆடவருக்கான ஒற்றையர் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டம் நாளை நடக்க உள்ளது. இந்த ஆட்டத்தில் நம்பர் வன் வீரர் நோவக் ஜோக்கோவிச்சை எதிர்த்து டேனில் மெத்வதேவ் மோதுகிறார். ஜோக்கோவிச் இந்த பட்டத்தை வென்றால் அது 18வது கிராண்ட்ஸ்லாமாகவும், 9வதுஅவுஸ்.ஓபன் பட்டமாகவும் அமையும்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தசுன் ஷானக கப்டனாக தொடர மலிங்க ஆதரவு!

Pagetamil

உலகக்கிண்ணம் வரை தசுன் ஷானக கப்டனாக செயற்படுவார்!

Pagetamil

15 ரன்களில் சுருண்ட மங்கோலிய அணி

Pagetamil

‘ஆசிய கிண்ண இறுதிப்போட்டி தோல்வி எச்சரிக்கை மணி’: இலங்கை பயிற்சியாளர்

Pagetamil

கோலியை போல நடந்து காட்டிய இஷான் கிஷன்: கத்துக்குட்டி இலங்கையை கதறவிட்ட பின் கலாய்ப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!