மருத்துவம்

ஷேவ் பண்ணுங்க பாஸ்!

இன்றைய இளைஞர்களின் அடையாளங்களில் ஒன்று நீண்ட தாடி. ஆனால், அழகுக்காக தாடிவைக்க விரும்பும் இளைஞர்கள், ஆரோக்கியத்தையும் கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.

ஷேவிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

சருமத்தின் உயிரற்ற செல்களை நீக்கும். புதிய செல்கள் உருவாவதால் முகப்பொலிவு கூடும்.

அதிக அளவில் தாடி வைத்திருப்போருக்கு சருமத்தில் எண்ணெய்ப்பசை அதிகரிக்கும். சருமத்தின் துவாரங்கள் அடைத்துக்கொள்ளும். முகப் பருக்கள் வரும்.

தாடி வைத்திருந்தால், முகத்தில் அரிப்பு ஏற்படும். தொடர்ந்து சொறிந்து கொண்டே இருந்தால், முகத்தில்
தடிப்புகள் ஏற்படலாம். ஷேவிங் செய்வதன் மூலம் அரிப்பைத் தவிர்க்கலாம். சருமத்தில் தடிப்புகள் வராமலும் காக்கலாம்.

சாப்பிடும்போது உணவுத்துகள்கள் தாடியின் இடையில் சிக்கிக்கொள்ளலாம். சரியாகச் சுத்தம் செய்யாத பட்சத்தில் அவை சருமத் தொற்றுகளுக்குக் காரணமாகலாம்.

ஷேவிங் செய்யும்போது பயன்படுத்தும் க்ரீம் மற்றும் ஆஃப்டர் ஷேவிங் லோஷன் போன்றவை சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும். ஈரப்பதமுள்ள சருமம் இளமையாகவும் காட்சியளிக்கும்.

பருக்களுக்கும் பொடுகுப் பிரச்னைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தலையில் பொடுகு இருப்பவர்களுக்கு அது மீசை, தாடி ரோமங்களிலும் தொற்றலாம். பொடுகு இருப்பவர்களுக்கு முகம், முதுகுப் பகுதிகளில் பருக்கள் அதிகரிக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

Leave a Comment