Pagetamil
இலங்கை

ரி 56 துப்பாக்கி தோட்டாவுடன் பொலிஸ் அதிகாரி கைது!

ரி-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 15 தன் வசம் வைத்திருந்த பொலிஸ் அதிகாரியொருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற போது இன்று (19) விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்திற்கான சிறப்பு ஒத்திகை திட்டம் கட்டூநாயக்க விமான நிலையத்தில் நடந்து வரும் போது இந்த சம்பவம் நடந்தது.

சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் போதைப்பொருள் பணியகத்துடன் இணைக்கப்பட்ட துணை ஆய்வாளர் ஆவார்.

தோட்டாக்களுடன் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றபோது பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், கட்டுநாயக்க விமான நிலைய பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 01 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கதுட்டுநாயக்க விமான நிலைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

தேசபந்துவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பாய்கிறது!

Pagetamil

கிளிநொச்சியை உலுக்கிய சிறார் துஸ்பிரயோக குற்றச்சாட்டு: புலிகள் அமைப்பிலும் இதே குற்றச்சாட்டை சந்தித்தவர்!

Pagetamil

மோடி- அனுர 15 நிமிடங்கள் தொலைபேசி உரையாடல்

Pagetamil

பிக்கு உடையில் தலதா மாளிக்கைக்குள் நுழைய முயன்ற மாணவன்!

Pagetamil

18 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

Pagetamil

Leave a Comment