பிரான்சின், லாசப்பல் பகுதியில் தமிழர் ஒருவரின் வர்த்தக நிலையத்தின் கீழ் இருந்த சுரங்கத்திற்குள்ளிருந்து பெருந்தொகை தங்கம், பணம் மீட்கப்பட்டுள்ளது.
55 வயதான வர்த்தக நிலைய உரிமையாளரான இலங்கை தமிழர் பொலிசாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிலோ கணக்கான தங்கம், வைரம், தங்க நாணயங்கள், 125,000 யூரோ பணம் உள்ளிட்டவை நிலக்கீழ் அறைக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளன. தங்கத்தை உருக்கும் கருவிகளும் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டவற்றின் பெறுமதி மிகப்பெரியது என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (18) இந்த சம்பவம் நடந்தது.
பாரிஸின் 10 வது அரோன்டிஸ்மென்ட்டில் அமைந்துள்ள ஒரு புகைப்பட கலையகத்தின் பின்புறத்தில் ஒரு நிலத்தடி மறைவிடத்தை பொலிசார் சோதனையிட்டு, அவற்றை கைப்பற்றினர்.
மறைத்தல், திருட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் பண மோசடியுடன் தொடர்புபட்ட சொத்துக்களாக இருக்கலாமென்ற சந்தேகத்தில், உரிமையாளர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
10 நாட்களின் முன்னர் அவருக்கு சொந்தமான இன்னொரு வர்த்தக நிலையத்தின் கீழிருந்த கட்டிடத்தில் பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டதன் தொடர்ச்சியாக, நேற்று இந்த சோதனை நடந்துள்ளது.
ஐரோப்பாவில் இடம்பெற்ற பணச்சேகரிப்புடன் தொடர்புபட்ட சொத்துக்களாக இவை இருக்கலாம், புலிகளுடன் தொடர்பை கொண்டிருக்கலாமென பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.