27.7 C
Jaffna
September 22, 2023
இலங்கை

பிரதேசசபை உறுப்பினரால் 20 ஏக்கருக்கும் அதிக காடழிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணவாளன் பட்டமுறிப்பு கிராமத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் சுமார் 20 ஏக்கர் வரையான காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பல மாதங்களாக கனரக இயந்திரங்கள் கொண்டு வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் எல்லைகளையும் தாண்டி காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்படுகின்றபோதும் பொலிசாரோ வனவளத்திணைக்களமோ பிரதேச செயலகமோ இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருக்கின்றமை தொடர்பில் ஐயம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் சுமார் 20 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த விதமான ஆவணங்களும் இல்லாத நிலையில் சட்டவிரோதமான முறையில் இந்த காடுகள் அழிக்கப்படுவதாக தெரியவருகின்றது.

இந்த காடழிப்பு சட்டபூர்வமாக நடக்கிறதா, அதற்கான ஆவணங்கள் தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக கோரப்பட்டபோதும் இன்று வரை பிரதேச செயலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான பதில்களை தராமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றது. இது, பிரதேச செயலகத்தின் அதிகாரிகளும் இந்த காடழிப்பு நடவடிக்கைக்கு உடந்தையாக இருக்கிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கிராமங்களில் ஏழை மக்கள் பலர் தமது வாழ்விடத்துக்காக அரை ஏக்கர் காணிகளை கூட பெற்றுக்கொள்ள முடியாது திண்டாடி வருகின்றனர். ஆனால், பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பண பலத்தையும் அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி காடழிப்பில் ஈடுபட, அரச அதிகாரிகள் பொலிசார் நடவடிக்கை எடுக்காது இருப்பது அதிர்ச்சியனிக்கும் விடயம்.

எனவே மணவாளன் பட்டமுறிப்பு பகுதியில் குறித்த பிரதேச சபை உறுப்பினரால் பிடிக்கப்பட்டிருக்கின்றன 20 ஏக்கருக்கு மேற்பட்ட அளவிலான இந்த காடுகள் எவ்வாறு இடிக்கப்பட்டது? இதற்கான ஆவணங்கள் உள்ளதா? இல்லை எனில் இதற்கு துணைபோன அதிகாரிகளுக்கு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் மிக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பம்பலப்பிட்டி புகையிரத நிலைய கூரை கழன்று விழுந்து 2 பேர் காயம்!

Pagetamil

நல்லூரில் திலீபன் ஆவணக்காப்பகம் திறப்பு: வரலாற்றை அறிய இளையவர்கள் முண்டியடிப்பு!

Pagetamil

பாணுக்குள் பீடித் துண்டு!

Pagetamil

யாழில் 33 வருடங்களின் பின் ஆலயத்தில் வழிபட அனுமதித்த இராணுவம்!

Pagetamil

பேராதனை பல்கலை மருத்துவபீடத்தில் பயின்ற மன்னார் மாணவன் திடீர் மரணம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!