பிரதான செய்திகள் முக்கியச் செய்திகள்

நெல்லியடி சந்தைக்குள் ஒருவர்… மிருசுவிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்: வடக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள்!

வடக்கில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 8 பேர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 366 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன. யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 462 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில்,

யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குள் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் அண்மையில் வெளிமாவட்டத்திற்கு சென்று வந்தவர். நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து இன்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானது.

நெல்லியடி பொதுச்சந்தையில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

அச்சுவேலி சந்தையில் அண்மையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் குடும்ப உறுப்பினர் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

மிருசுவில் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அண்மையில் நானாட்டான் ஹட்டன் நஷனல் வங்கியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஒருவரின் குடும்ப உறுப்பினர்களே தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தையிட்டி விகாரையில் வழிபட தமிழ் பொலிசார் கட்டாயப்படுத்தப்படுகிறார்களா?

Pagetamil

சீனி வரியிழப்பை உறுதி செய்த இராஜாங்க அமைச்சர்!

Pagetamil

ஜனாதிபதி தேர்தலில் சரத் பென்சேகாவும் களமிறங்குகிறார்!

Pagetamil

LPL 2024: ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களின் விபரம்!

Pagetamil

‘தமிழ் அரசு கட்சியை பணிய வைப்போம்…’- குடிமைச்சமூகம் வீறாப்பு; ‘அரசியல் முள்ளிவாய்க்காலை உருவாக்காதீர்கள்’-கட்சிகள் அறிவுரை!

Pagetamil

Leave a Comment