25.7 C
Jaffna
December 12, 2024
Pagetamil
குற்றம்

பேஸ்புக்கில் காதலித்து வலைவிரித்த யுவதி; அறியாமல் வந்து உயிரைவிட்ட ஆசிரியர்: கட்டிட தகராறில் இரண்டாவது கொலை!

மாத்தறையில் சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதியான கட்டிடம் ஒன்று தொடர்பான தகராற்றில் ஆசிரியர் ஒருவரை கடத்தி கொலை செய்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், 22 வயதான யுவதியும் உள்ளடங்குகிறார். கொலையானவரின் பேஸ்புக் காதலியாக நடித்து அவரை கடத்த துணைபுரிந்ததால் யுவதியும் கைதாகியுள்ளார்.

26 வயதான சம்பத் எராந்த பெர்னாண்டோ என்பவரே கொல்லப்பட்டார்.

அவரது மனைவி ரமீஷா கவிந்திக்கு சொந்தமாக மாத்தறையில் கட்டிடமொன்று இருந்து. அந்த கட்டிடத்தை வாடகைக்கு எடுத்த தரப்பினருக்கும், உரிமையாளர்களிற்கும் மாத்தறை நீதிமன்றத்தில் வழக்கொன்று நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு சென்று விட்டு ரமீஷா கவிந்தி வீடு திரும்பியபோது, அவரது தாயார் இனம்தெரியாதவர்களால் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தார். மொரட்டுவ பகுதியில் 3 வருடங்களின் முன்னர் இந்த சம்பவம் நடந்தது.

அந்த கொலை விவகாரம் மர்மமாக இருக்கிறது.

இந்த நிலையில், கட்டிட விவகாரத்தில் இரண்டாவது கொலை நடந்துள்ளது.

ஒரு யுவதி பேஸ்புக்கில் சம்பத் எரந்தவுடன் அறிமுகமாகி, காதலியாகி, அவரை குளியாப்பிட்டி வீட்டிலிருந்து வெளியே அழைத்து சென்றுள்ளார். எரந்தவை வௌியே அழைத்து வருவதற்காக, பேஸ்புக் காதலியாக நடித்து, அவரை வெளியே அழைத்து வர யுவதிக்கு 500,000 ரூபா வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சம்பத் எரந்தவையும் மனைவியையும் கொலை செய்வதே தொழிலதிபரின் திட்டமாக இருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பு வரவில்லை.

சம்பத் எரந்தவின் பேஸ்புக் காதலியாக நடித்தவர், அவரை கட்டுநாயக்கவிற்கு அழைத்து வருவதாக உறுதியளித்திருந்தார். சீதுவ, முத்துவாடிய பாலம் கடந்து அவர் வந்தபோது, யுவதி தனது இருப்பிடம் குறித்து தெரிவித்துள்ளார்.

சம்பத் எரந்தவை கடத்த கோடீஸ்வர தொழிலதிபர், மேலும் 4 இளைஞர்களுடன் காரில் அங்கு சென்றார்.

சம்பத் எரந்த அடிக்கடி லசந்த பிரேமலால் என்பவரிற்கு சொந்தமாக டக்ஸியிலேயே பயணம் செய்வார். பெப்ரவரி 8ஆம் திகதி காலை 7 மணியளவில் அவரது டக்ஸியில் பயணித்தார். ஒரு நண்பரின் தந்தையை கட்டுநாயக்கவில் பார்க்க வேண்டுமென டக்ஸி சாரதியிடம் காரணம் கூறியிருந்தார்.

முத்துவாடிய பாலத்தை கடந்ததும் 500 மீட்டர் தொலைவில் டாக்ஸியை நிறுத்திய சம்பத் எரந்த, கீழே இறங்கிச் சென்று யுவதியுடன் பேசினார். அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, காரொன்று அங்கு வந்தது. அதிலிருந்து இறங்கிய இருவர் சம்பத் எரங்க, யுவதியை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

காலை 10.15 மணியளவில் சீதுவ பொலிஸ் நிலையம் சென்ற டாக்சி சாரதி, கடத்தல் நடந்ததாக பொலிசாரிடம் தெரிவித்தார்.

பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிரிவி கமரா காட்சிகளை பரிசோதித்தனர்.

கைத்தொலைபேசி தரவுகளை ஆராய்ந்ததில் காலை 9.20 மணியளவில் கடத்தல் நடந்ததை பொலிசார் உறுதி செய்தனர்.

தொலைபேசி பதிவுகள் மூலம் யுவதி அடையாளம் காணப்பட்டார்.

வாகனத்திற்குள் சம்பத் எரந்தவின் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை நடந்தது. பிற்பகல் 3 மணிக்கு அவரது உடலை நிக்கவரெட்டிய – கொட்டவெர பகுதியில் போட்டுள்ளனர்.

11ஆம் திகதி சடலத்தை பொலிசார் கண்டுபிடித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முழங்காவில் உணவகத்துக்குள் புகுந்து வாள்வெட்டு

Pagetamil

ஓமந்தைக் கொலையுடன் தொடர்புடைய 5 பேர் கைது!

Pagetamil

சிறுமியின் தலைமுடியை வெட்டிய வளர்ப்புத்தாய் கைது!

Pagetamil

மொடலாக மாற ஆசைப்பட்ட 23 வயது யுவதி வல்லுறவு!

Pagetamil

மனைவியை கொன்ற கணவன்!

Pagetamil

Leave a Comment