ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடுபூராகவும் சிற்றூழியர்களின் 10 கோரிக்கைகளை வெல்லும் போராட்டம் அடையாள வேலை நிறுத்தமாக இன்று முன்னெடுக்கப்பட்டது.
இவ் போராட்டத்திற்கு ஒத்துழைப்பாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை சிற்றூழியர்களும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அடையாள வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.
இன்று காலை வைத்தியசாலை வளாகத்தினுள் ஒன்று கூடிய ஊழியர்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய வாசகங்களை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை தாங்கள் கடமையில் ஈடுபடாமல் அடையாள வேலை நிறுத்த்தில் ஈடுபட்டனர்.
1)வாரத்தில் மேலதிக 8 மணி நேரத்திற்கு சம்பளத்தில் 1 ற்கு 30 பெற்றுக்கொள்ளல்.
2)180 நாட்களை நிறைவு செய்த சகல சுகாதார சிற்றூழியர்கள், சமயாசமய ஊழியர்களை உடனடியாக நிரந்தரமாக்கிக் கொள்ளல்.
3)சீருடை கொடுப்பனவை ரூ1500 க மாற்றி கொள்ளல்.
4)சகல சுகாதார ஊழியர்களும் விசேட அனர்த்த கொடுப்பனவை பெற்றுக் கொள்ளல்.
5)தாமதமான செவிலியர் நியமனங்களை விரைவில் பெற்றுக் கொள்ளல்.
6)பறிக்கப்பட்ட விழா முற்பண கொடுப்பணவை வட்டியின்றி மீண்டும் பெற்றுக்கொள்ளல்.
7)மேலதிக நேர வேலையை கட்டண முறையில் பெற்றுக்கொள்ளல்.
8)முறைப்படி பணியில் சேர்த்துக் கொள்ளும் முறையொன்றையும் முறையான கடமைப் பட்டியலையும் பெற்றுக் கொள்ளல்.
9)வைத்தியசாலை சிற்றூழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல்.
10)முகாமைத்துவ சேவை பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் நியமனம் பெற்றுக் கொள்ளும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஓய்வூதிய உரிமையை பெற்றுக் கொள்ளலும் என்ற 10 கோரிக்கைகளை வெல்லும் போராட்டமே இன்று முன்னெடுக்கப்பட்டது.