25.9 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

மீண்டும் கடல்வழியாக இலங்கைக்குள் நுழைந்தாரா சாரா?: விசாரணை ஆரம்பம்!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலாளியொருவரின் மனைவியான சாரா என அழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன், நாட்டுக்குள் நுழைந்ததாக வெளியான தகவல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சிஐடியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி 3 தேவாலயங்கள், ஹொட்டல்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டு தாக்குதல் குழுவுடன் நேரடி தொடர்பு கொண்டிருந்த போதும், இதுவரை கைது செய்யப்படாமலுள்ள ஒரேநபராக புலஸ்தினி கருதப்படுகிறார்.

நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டிய தேவாலயத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவரின் மனைவி அவர்.

மட்டக்களப்பை சேர்ந்த இந்துவான அவர், வீட்டைவிட்டு வெளியேறி மதம் மாறி, தற்கொலைதாரியை திருமணம் செய்து கொண்டிருந்தார். அவரை மதம் மாற்றியதாக குறிப்பிடப்படும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் ராசிக், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார். புலஸ்தினி விரும்பியே மதம் மாறியதாக சாட்சியமளித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின்னர், சாய்ந்தமருதில் தங்கியிருந்த சஹ்ரானின் சகோதரன் உள்ளிட்ட குழுவினரில், தாக்குதல்தாரிகளின் மனைவிகளும் உள்ளடங்கியிருந்தனர். அதில் புலஸ்தினியும் ஒருவர்.

சாய்ந்தமருது, வெலிவேரியனில் அமைந்திருந்த வீட்டில் தங்கியிருந்தவர்கள் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட போது, சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் மட்டுமே உயிருடன் மீட்க்கப்பட்டனர். ஏனையவர்கள் உயிரிழந்திருந்ததாக கருதப்பட்டது.  புலஸ்தினியும் உயிரிழந்ததாக கருதப்பட்டது.

எனினும், மீட்கப்பட்ட சடலங்களின் மரபணு பரிசோதனையில், புலஸ்தினி உயிரிழக்கவில்லையென்பது தெரிய வந்தது. 

பின்னர் நடந்த விசாரணையில் அவர் கடல்வழியாக மன்னாரிலிருந்து இந்தியாவிற்கு தப்பிச் சென்றது தெரிய வந்தது. மட்டக்களப்பில் இருந்து அவரை வாகனமொன்றில் பொலிஸ் அதிகாரியொருவர் ஏற்றிச்சென்றதை கண்டதாக ஒருவர் தகவல் வழங்கியிருந்தார். அந்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக புலஸ்தினி நாட்டிற்குள் நுழைந்துள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக மன்னாரிற்கு வந்து, அங்கு 3 இடங்களில் தங்கியிருந்து, மட்டக்களப்பு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வரும் நிலையில் தலைமறைவாக இருந்தவர்கள், பிணையில் விடுதலையானவர்கள், கைது செய்யப்பட்ட பின்னர் போதிய ஆதாரமின்மையால் விடுதலையானவர்களை அவர் சந்தித்து பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ்ப்பாணத்தை மிரட்டும் எலிக்காய்ச்சல்: பிந்திய நிலவரம்!

Pagetamil

யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

Pagetamil

ஃபோர்ட் சிட்டி ஆணைக்குழு நியமனம்

east pagetamil

இலிங்கநகரில் இளைஞர் வள நிலையம் திறப்பு

east pagetamil

படகு கவிழ்ந்து ஒருவர் பலி மட்டக்களப்பில் சோகம்

east pagetamil

Leave a Comment