பிடுங்கியெறியப்பட்ட குடியிருப்புக்கள், பொருட்களுடன் ஏ9 வீதியை மறித்த மக்கள்: பளையில் பரபரப்பு!

Date:

தாம் வசிக்கும் கொட்டகைககளை பொலிஸார் மற்றும் தென்னை பயிற்செய்கை
சபையினர் அடாத்தாக பிடுங்கியமைக்கு எதிராக பளை கரந்தாய் மக்கள் ஏ9
வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணித்தியாலம் ஏ9 வீதி முடங்கியது.

அந்த பகுதியே பெரும் போர்க்களம் போல காட்சியளித்தது.

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பளை
கரந்தாய் கிராமத்தில் 1976 ஆம் ஆண்டு மக்கள் குடியேறிய இருந்தனர்.
அதன்பின் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமா பல்வேறு இடங்களுக்கு
சென்ற மக்கள் போர் நிறைவடைந்ததன் பின்னர் 2010 ஆம் ஆண்டு மீண்டும்
கரந்தாய் கிராமத்தில் குடியேயுறியிருந்தனர்.

அவ்வாறு குடியேறி இருந்த மக்களை தென்னை பயிர்ச்செய்கை சபையிர் மக்கள்
குடியேறி இருக்கும் காணி தமக்குரிய காணி என தெரிவித்து 2015 மக்களை
அவ்விடத்தில் இருந்து வெளியேற்றியிருந்தனர்.

இதனை அடுத்து மக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பயன் கிடைக்காத நிலையில்
யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

இதன் பயனாக மக்களுடைய காணிகளை இரு வாரங்களுக்குள் மக்களிடம்
கையளிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேவண்டும் என உரிய அதிகாரிகளுக்கு கடந்த வருடம் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் காணிகளை மக்களிடம் கையளிக்குமாறு பல தடவைகள் மனித
உரிமைகள் ஆணைக்குழு உரியவர்களுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில் மக்கள் தமது தீர்வினை தாமே பெற்றுக்கொள்ளும்
நோக்குடன் தமது காணிகளிற்குள் உள்நுளைந்த மக்கள் கடந்த இரண்டு மாதமாக
தற்காலிக கொட்டில்களை அமைத்து வசித்து வருகின்றனர்.

்இந்நிலையில் இன்றைய அங்கு வந்த தென்னை உற்பத்தி சபையினர் மற்றும்
பளை பொலீசார் மக்கள் கொட்டில் போட்டு குடியிருந்த வீடுகளை
அடாத்தாக புடுங்கி மக்களை தாக்கியுள்ளனர்.

அதனை அடுத்து, பொலிசாரால் மற்றும் தென்னை தென்னை பயிர்ச்செய்கை சபையிரால் புடுங்கப்பட்ட கொட்டகைகளை மற்றும் தூக்கி வீசப்பட்ட வீட்டு பாத்திரங்களை கரந்தாய் ஏ9 வீதியில் போட்டு வீதியை மறித்து போராட்டத்தினை
மக்கள் முன்னெடுத்தனர்.

இவ் போராட்டத்தின் காரணமாக ஏ9 வீதி சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேல்
முடக்கப்பட்டு இருந்தது. அதன் பின் குறித்த இடத்திற்கு வந்த பளை
பொலிசார் போராட்டத்தில் ஈடு மக்களுடன் கலந்துரையாடினார்.

கலந்துரையாடலின்போது தென்னை பயிர் செய்கை சபையினரால் பிடுங்கப்பட்ட
கொட்டகைகளை மீண்டும் அமைத்து தருவதற்கு ஏற்பாடு செய்வதாக மக்களுக்கு பளை பொலிசார் வாக்குறுதி வழங்கியதை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் ஆண்களிடம் மட்டும் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று

தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் ஆண்களை...

திருகோணமலையில் நேற்று அகற்றப்பட்ட சிலையை மீள வைத்து பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும்: கோட்டா காலத்தையை மிஞ்சும் அனுரவின் நடவடிக்கை!

திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டது தொடர்பாக நேற்று பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக...

Fortune Favors the Bold A High-RTP Adventure Awaits on Chicken Road.

Fortune Favors the Bold: A High-RTP Adventure Awaits on...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்