கிளிநொச்சி, புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியில் நபர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
நேற்று நாகேந்திரம் பகுதியில் நெல் அறுவடைக்கு வந்த சிங்காரவேல் மனோகரன் (37) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் நெல் அறுவடைக்காக வந்திருந்ததார். அதை முடித்துக்கொண்டு நேற்றிரவு குளிக்கச் சென்ற பின்னர் காணாமல்போயுள்ளார்.
அதன் பின்னர் அவரை தேடும் நடவடிக்கையின்போது, அவரது உடை மற்றும் சவற்காரம் என்பன கிணற்றின் அருகில் இருந்ததை அவதானித்த ஏனைய நபர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தேடல் பணிகளை தொடங்கியபோது, மேற்படி நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1