டிக்டொக்கில் சூப்பர் பிரபலமான தசாரியா க்வின்ட் நோயஸ் -Dazhariaa Quint Noyes (18) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மிக சிறிய வயதலேயே டிக்டொக்கில் உச்ச புகழடைந்த அவரை, Dee என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர்.
கடந்த 8ஆம் திகதி டீ இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இது தான் தன் கடைசி போஸ்ட் என்று தெரிவித்திருந்தார். அந்த வீடியோவில் அவர் சந்தோஷமாக பாடி, டான்ஸ் ஆடியிருந்தார்.
இந்நிலையில் தசாரியா தன் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரின் தந்தை ரஹீம் அல்லா டிக்டொக்கில் வீடியோ வெளியிட்டார்.
அந்த வீடியோவை பார்த்த தசாரியாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடைசி போஸ்ட் என்று சொல்லி வெளியிட்ட வீடியோவில் கூட சந்தோஷமாகத் தானே இருந்தார், ஏன் இப்படி அவசரப்பட்டுவிட்டார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தசாரியாவின் இந்த முடிவுக்கு அவரின் காதலர் மைக் தான் காரணம் என்று சிலர் குற்றம் சாட்டினார்கள். இந்நிலையில் தான் தசாரியாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டிக்டொக்கில் வெளியிட்டு உருக்கமான போஸ்ட் போட்டுள்ளார் மைக்.
அந்த போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள், தசாரியாவின் முடிவுக்கு மைக் காரணமாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். தன் முடிவுக்கு மைக் காரணம் இல்லை என்று தசாரியா கடிதம் எழுதி வைத்திருக்கிறார். மேலும் இந்த முடிவுக்கு பாட்டியும் காரணம் இல்லை என்பதை அவரிடம் தெரிவிக்கவும் என தசாரியா அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.