இன்றைய குழந்தைகள் மொபைலில் புகுந்து விளையாடுகிறார்கள்.
ஆனால் பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன, டேப்லெட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் குழந்தைகளின் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன.
சும்மா உட்கார்ந்தபடி தொடுதிரையை விரல்களால் தேய்த்து கொண்டிருக்கும் பழக்கம் விரல்களுக்கோ கைகளுக்கோ போதுமான பயிற்சியை தருவதில்லை.
இயல்பாக குழந்தைகளின் விரல்கள் மற்றும் கைகள் அந்த வயதில் பெறவேண்டிய ஆற்றலை பெறுவதில்லை. அதனால் அவை திடமான வளர்ச்சி அடைவதில்லை. இப்படியே பழகும் குழந்தைகள் அதன்பின் பள்ளிகளில் சேரும்போது பிரச்சினை முளைக்கத் தொடங்குகிறது.
ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால், பார்வைத்திறன் பாதிக்கப்படுகிறது. இளம் வயதிலேயே கிட்டப்பார்வை குறைபாடு ஏற்பட்டு விடுகிறது. பொதுவாக பெற்றோர்களும்இ மற்றோர்களும் பேசிப்பேசிதான் குழந்தைகளின் பேச்சுத்திறனும், மூளைத்திறனும் வளர்ச்சி பெறுகிறது.
செல்போனோ, டேப்லெட்டோ இல்லாத விளையாட்டுகளை விளையாட மறுப்பார்கள். யாருடனும் இயல்பாக பழகமாட்டார்கள். பக்கத்து வீட்டுக்குழந்தையுடன் நட்பாக இருப்பதில்லை..
வீடியோ கேமை விளையாட விடாமல் தடுத்தால் ஆக்ரோஷமாகி கத்துவார்கள். உங்களோடு பேசமாட்டார்கள். இவையெல்லாம் அறிகுறிகள். இதை தடுக்க இரண்டு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளிடம் செல்போன் உட்பட எந்த திரையுள்ள கருவிகளையும் தராதீர்கள்இ என்கிறார்கள் குழந்தைகள் நல டாக்டர்கள்.