தொழில்நுட்பம்

இந்தியாவின் Remove China Appsஐ நீக்கியது கூகுள்!

கடந்த மே மாதம் 17ஆம் திகதி OneTouch AppLabs என்ற இந்திய நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட செயலி Remove China Apps. இது உங்கள் ஸ்மார்ட் போன்களில் உள்ள சீன நாட்டுச் செயலிகளைத் தேடிப்பிடித்து நீக்குவதற்கு உதவி செய்யும்.

இந்திய – சீன எல்லையில் அண்மைய நாட்களில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலையடுத்து இந்தச் செயலி மீதான இந்தியர்களின் கவனம் அதிகரித்திருந்தது. அறிமுகமாகி பத்தே நாட்களில் இந்தச் செயலியை ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தரவிறக்கம் செய்திருந்தனர்.

ஆனாலும், இதனைத் தனது play store தளத்திலிருந்து ‘விதிமுறை மீறல்களைச் செய்திருப்பதாக’ தெரிவித்து நீக்கியிருக்கிறது கூகுள். இது play store இலிருந்து நீக்கப்பட்டபோது 5 மில்லியன் தரவிறக்கங்களை எட்டியிருந்ததாகக் கூறப்படுகிறது.

‘எந்தவொரு செயலியும் மற்றைய செயலிகளை நீக்குவதற்கு அல்லது செயலிழக்க வைப்பதற்கு பயனாளர்களைத் துண்ட அல்லது ஊக்கப்படுத்துமானால், தொலைபேசிகளின் பாதுகாப்பினை கேள்விக்குட்படுத்துமானால் அதை எம்மால் அனுமதிக்க முடியாது’ என்று தெரிவிக்கிறது கூகுள்.

‘இதுபோன்ற செயலிகள் குறித்ததொரு நாட்டை அல்லது நாடுகளைக் குறிவைத்து இயங்குகின்றன. இத்தகைய செயற்பாடானது செயலி வடிவமைப்பாளர்களையும் பயனாளர்களையும் கொண்ட எமது தளத்தைப் பயன்படுத்தும் சமூகத்தினருக்கு ஏற்றதாக இருக்காது.

இத்தகைய விதி மீறல்கள் காரணமாக பல நாடுகளைச் சேர்ந்த செயலிகளை நாம் கடந்த காலத்திலும் நீக்கியிருக்கிறோம்’ என Remove China Apps இனை நீக்கியதற்கான தனது விளக்கத்தினை கூகுள் வெளியிட்டிருக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

இனி பாஸ்வேர்ட் தேவையில்லை: கூகிளின் புதிய தொழில்நுட்பம்!

Pagetamil

ருவிற்றரின் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்: நீல குருவிக்கு பதிலாக நாய் படம்

Pagetamil

Leave a Comment