ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் இந்தியன்-2. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கிய படக்குழுவினர், பின்னர் ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் படமாக்கினர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஷுட்டிங், கடந்தாண்டு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக தடைபட்டது. அப்போது நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு ஓராண்டாகியும் இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தாமதாகி வருவதால், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, அப்படத்தில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு வேறு படங்களில் ஒப்பந்தமாக முடியாத காரணத்தால், ரத்னவேலு இத்தகைய முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இருப்பினும் இதுகுறித்து படக்குழு தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. முதலில் இப்படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானார். பின்னர் அவர் விலகியதால் ரத்னவேலுவை ஒப்பந்தம் செய்தனர். தற்போது அவரும் விலக உள்ளதாக கூறப்படுவது படத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.