27.7 C
Jaffna
September 22, 2023
உலகம்

ஈராக்கில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

ஈராக்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈராக்கில் ஆறு இலட்சத்து ஆயிரத்து 41பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் ஈராக்கில், இதுவரை ஆறு இலட்சத்து 30ஆயிரத்து 263பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், 13ஆயிரத்து 126பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 173பேர் பாதிக்கப்பட்டதோடு 6பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 16ஆயிரத்து 96பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 195பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்க ஜனாதிபதி பைடனை சந்தித்தார் உக்ரைனிய ஜனாதிபதி

Pagetamil

476,000 ஆண்டுகள் பழமையான மரத்தில் செய்யப்பட்ட கட்டமைப்பு மீட்பு!

Pagetamil

பன்றிக்கறி சாப்பிடும் முன் ‘பிஸ்மில்லா’ கூறிய இந்தோனேசிய பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை

Pagetamil

20 ஆண்டுகளின் பின் சீனா சென்றார் சிரிய ஜனாதிபதி!

Pagetamil

‘இனி ஆயுதங்கள் வழங்க மாட்டோம்’: முக்கிய நாட்பு நாட்டின் அறிவித்தலால் உக்ரைனுக்கு அதிர்ச்சி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!