சமையல் எரிவாயு பற்றாக்குறை இல்லை என்றும், தேசிய தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவு இருப்பு வைத்திருப்பதாகவும் உறுதியளித்து, பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
விநியோகம் தடையின்றி தொடர்வதாகவும், சில பகுதிகளில் குறைந்த அளவு எரிவாயு கிடைப்பதாக எழுந்துள்ள தகவல்கள் உள்ளூர் விநியோக தாமதங்கள் காரணமாக இருக்கலாம் என்றும் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விநியோகப் பிரச்சினைகளை தாமதமின்றி தீர்க்கும் வகையில், அந்தந்தப் பகுதிகளில் ஏதேனும் பற்றாக்குறை இருந்தால், உடனடியாக நிறுவனத்திற்குத் தெரிவிக்குமாறு லிட்ரோ நுகர்வோரைக் கேட்டுக் கொண்டுள்ளது.




