கமலுடன் இணைந்து நடிப்பது பற்றி ரஜினி சொன்னது!

Date:

ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப் பிடிப்பு கேரளாவில் நடக்கிறது. அங்கு செல்வதற்காக ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, அவரிடம் கமல்ஹாச னுடன் இணைந்து நடிக்க இருக்கும் படம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.

அவர் கூறும்போது, “அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட் இரண்டுக்கும் சேர்த்து ஒரு படம் பண்ண போகிறேன். இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை. கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்குச் சரியான கதை, கதாபாத்திரம் கிடைக்க வேண்டும். கிடைத்தால் நடிப்போம்” என்றார்.

பின்னர் கோவை விமான நிலையம் சென்ற அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு 6 நாட்கள் நடக்க இருக்கிறது. அடுத்த வருடம் ஜூன் மாதம் படம் வெளியாகும்” என்றார்.

அவரிடம் “திரைக்கலைஞர்களுக்குக் கூடும் கூட்டம் ஒட்டாக மாறுமா?” என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “நோ கமெண்டஸ்” என்று பதிலளித்துவிட்டுச் சென்றார்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது: அனைத்து முனைகளிலும் போருக்கு முற்றுப்புள்ளி!

லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளுக்கு "உடனடி மற்றும் நிரந்தர"...

இன்னும் சில மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இன்னும் சில "மணிநேரங்களில்"...

சுரேஷ் சாலேவை மிரட்டி மருந்து கொடுத்த தாதி!

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்