பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவுடன் இரவு நேரத்தில் சந்தித்ததாகக் கூறப்படும் தவறான ஊடகச் செய்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் நேற்று (25) அறிவித்துள்ளது.
உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பி, அதன் முகநூல் பக்கம் மற்றும் தொடர்புடைய சமூக ஊடக தளங்கள் மூலம் பகிரப்பட்ட இந்தக் கூற்று முற்றிலும் தவறானது என்று அலுவலகம் வலியுறுத்தியது. தவறான செய்தியை உடனடியாகத் திருத்தக் கோரி, தொலைக்காட்சி நிறுவன உரிமையாளருக்கு ஏற்கனவே ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.
இத்தகைய தவறான மற்றும் நெறிமுறையற்ற செய்திகளைப் பரப்புவது பத்திரிகைத் துறையின் தொழில்முறை தரத்திற்கு முரணானது என்று செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.




