Site icon Pagetamil

கிளிநொச்சி பொலீஸ் சிறை கூண்டில் ஒருவர் தூக்கில் தொங்கி பலி!

கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் இன்றைய தினம் ( ஜூலை 25) குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் ஒருவர் விசாரணைகளுக்காக பொலீஸ் நிலையத்தின் விசாரணை கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மதியம்12.20 மணி அளவில் தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இரத்தினம் ராசு 66 வயதுடைய கிளிநொச்சி புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-மு.தமிழ்ச்செல்வன்-

Exit mobile version