ஜேர்மனியிலிருந்து யாழ் வந்தவர் அட்டகாசம்

Date:

ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்துள்ள நபர் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து இளைஞன் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கியதில், தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயங்களுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈச்சமோட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறையை கழிப்பதற்காக வந்துள்ளார். குறித்த நபர் சகோதரி குடும்பத்தினருடன் முரண்பட்டு, சகோதரியின் கணவருடனும் முரண்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஜேர்மன் நாட்டில் இருந்து வந்த நபர் , தனது சகோதரன் மற்றும் நண்பர்கள் என 10 பேருடன் மது அருந்தியுள்ளார்.

அவ்வேளை , ஏற்கனவே முரண்பட்ட சகோதரியின் கணவனின் நண்பர் அவ்வழியே சென்ற வேளை நிறை போதையில் இருந்த கும்பல் அவ்விளைஞனை வம்புக்கு இழுத்து தர்க்கம் புரிந்து , மண்வெட்டி பிடி, கூரிய ஆயுதங்களால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞனை அயலவர்கள் மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தாக்குதலாளிகள் அனைவரும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஜேர்மன் நாட்டில் இருந்து வந்த நபர் மீண்டும் ஜேர்மன் நாட்டுக்கு தப்பி செல்லாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘வாயை மூடிப் பேசவும்’: தமிழரசின் சித்திரை புத்தாண்டு தீர்மானம் இதுதான்!

சித்திரை புத்தாண்டில் இருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக் கூடிய...

மீனவரை சித்திரவதை செய்த கடற்படை மீது நடவடிக்கை இல்லையா?

கடற்படையினரால் கணவரான மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம்...

புகையிரதம் மோதி ரஷ்ய யுவதி பலி

பெலியத்தாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியதில் 23...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்