இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய நான்காவது நாளில் ஆட்டத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 133 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
பங்களாதேஷ் அணி சார்பாக முஸ்பிகுர் ரஹீம் 26 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பங்களாதேஷ் அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 247 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதோடு, இலங்கை அணி அதன் முதலாவது இன்னிங்ஸில் 458 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்த வெற்றியின் ஊடாக இலங்கை அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக இலங்கையின் 9வது இன்னிங்ஸ் வெற்றியாகும்.