யாழ்ப்பாணத்தவர்களுக்கு போட்டியாக களமிறங்கிய அம்பாறைவாசிகள்!

Date:

ஈரான் – இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் அம்பாறை மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை ,பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு ,சம்மாந்துறை ,நிந்தவூர், அட்டாளைச்சேனை ,அக்கரைப்பற்று , உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான நிலைமை தொடர்வதுடன் இதையடுத்து எரிபொருள் தட்டுப்பாடு குறித்து போலியான செய்திகளை பரப்ப வேண்டாம் என மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதே வேளை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடும் நெரிசல் தற்போது ஏற்பட்டு வருகின்றது.அம்பாறை மாவட்டத்தில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கட்டுப்பாடுகளுடன் எரிபொருட்கள் வழங்கப்பட்டு வருவதுடன் சில இடங்களில் இல்லை என்ற வாசகத்தினால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அத்துடன் தற்போது சில இடங்களில் மின்சாரம் தடைப்படுவதனாலும் எரிபொருள் நிலையங்கள் சில மூடப்பட்டுள்ளதை இன்று அவதானிக்க முடிகின்றது.மேலும் பொலிஸார் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் வரிசையில் நிற்கும் போது போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எரிபொருள் இன்மையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக என்றுமில்லாதளவில் நீண்ட வரிசைகளில் மக்கள் முண்டியடிக்க ஆரம்பித்துள்ளனர்.இதனால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களின் கையிருப்பு சடுதியாக தீர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட சமயங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நின்ற வரிசைகளை விட தற்போதே நீளமான வரிசைகளில் மக்கள் நிற்பதை அவதானிக்க முடிகிறது.

மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ வாகனங்களையே அதிகமாக பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காணப்பட்டது.

இதேநேரம் டீசலை பெற்றுக்கொள்ளும் பொருட்டும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் காத்திருந்தன.

இதேநேரம் அரச உத்தியோகத்தர்களும் பெற்றோல் தட்டுப்பாடு உருவாகலாம் எனும் அச்சத்தில் நீண்டதூரம் கடமைக்கு செல்வது தொடர்பிலும் கவலை அடைந்துள்ளனர்.

இருந்தபோதிலும் எரிபொருளுக்கான தட்டுப்பாடு தற்போதைய நிலைக்கு உருவாக வாய்ப்பில்லை என்பதும் அறியக்கூடியதாக அமைந்துள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை அவதானித்துள்ளதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாகவும்இ முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் இருப்புகளைப் பெற தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

எனவேஇ பொதுமக்கள் போலிச் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

-பாறுக் ஷிஹான்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

சீனாவை வந்தடைந்தார் ட்ரம்ப்

போட்டி வல்லரசுகளுக்கு இடையேயான ஆழ்ந்த பதற்றங்களைத் தணிக்கும் நோக்கில், சீனத் தலைவர்...

அடை மழையால் ஒருவர் பலி: 200 பேர் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளைப் பாதிக்கும் மோசமான வானிலை காரணமாக மட்டக்களப்பில் ஒருவர்...

பாடசாலைக்குள் மாணவன் கத்திக்குத்து: 5 மாணவர்கள் காயம்!

எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்