சங்கின் ஆதரவுடன் வாழைச்சேனையில் தமிழரசு வேட்பாளர் வெற்றி!

Date:

மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவுசெய்யும் வகையிலான அமர்வு இன்று (13)காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி முன்னிலையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த சுந்தரலிங்கம் சுதாகரன் முன்மொழிந்து வழிமொழியப் பட இன்னுமொரு தெரிவாக தமிழ் மக்கள விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த தனபாலன் நிர்மலன் முன்மொழியப்பட்டார்

இதன் பிரகாரம் தவிசாளர் தெரிவு முறையில் நடத்த வேண்டும் என உள்ளூராட்சி ஆணையாளர் அவர்களினால் உறுப்பினர்களிடம் கோரப்பட்டது திறந்த வாக்கெடுப்பு நடத்துவதற்கு 26 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தார்கள்.

இதன்போது தவிசாளராக போட்டியிட்ட சுந்தரலிங்கம் சுதாகரன் அவர்களுக்கு ஆதரவாக இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த 10 உறுப்பினர்களும், முஸ்ஸிம் காங்கிரைசை சேர்ந்த 04. உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த 01 உறுப்பினரும் என மொத்தமாக 15 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த தவிசாளராக போட்டி இட்ட தனபாலன் நிர்மலனுக்கு 4 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்கு அளித்ததுடன் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த 3 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.

இதன் பிரகாரம் தமிழரசுக் கட்சியை சேர்ந்த சுந்தரலிங்கம் சுதாகரன் அவர்கள் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

அதை அடுத்து பிரதி தவிசாளர் தெரிவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்போது தமிழரசு கட்சியைச் சேர்ந்த குழந்தைவேல் பத்மநீதன் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட இன்னுமொரு தெரிவாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த நவராசலிங்கம் நிமல்ராஜ் முன்மொழியப்பட்டு வழி மொழியப்பட் டிருந்தார்.

இதில் குழந்தவேல் பத்மநீதனுக்கு ஆதரவாக 15வாக்குகளும் நவராசலிங்கம் நிமல்ராஜ் அவர்களுக்கு ஆதரவாக 4 வாக்குகளும் கிடைக்கப்பெற்துடன் நடுநிலையாக 7 உறுப்பினர்கள் வாக்களித்தார்கள்.

அதன்படி கோறளைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளராக குழந்தவேல் பத்மநீதன் தெரிவு செய்யப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சபை அமர்வை தொடர்ந்து தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் ஆகியோர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

-கிரான் நிருபர்-

 

spot_imgspot_img

More like this
Related

“அம்மன் கனவில் வந்து சொன்னதால்…” – கோயிலில் மடிப்பிச்சை ஏந்தியது குறித்து நளினி விளக்கம்!

அம்மன் தன் கனவில் வந்து சொன்னதால் மடிப்பிச்சை ஏந்தியதாக நடிகை நளினி...

80 வயது மூதாட்டியின் மரண தண்டனையை இரத்து செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தால் 80 வயது மூதாட்டி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்திலேயே சாரதி அனுமதிப்பத்திரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்