‘நஷன்ஸ் லீக்’ பட்டம் வென்ற போர்த்துக்கல்: ஸ்பெயினை பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்த்தியது

Date:

யுஇஎஃப்ஏ நஷன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வென்றது போர்த்துக்கல் அணி. இதன் மூலம் நஷன்ஸ் லீக் தொடரில் 2வது முறையாக பட்டம் வென்றுள்ளது போர்த்துக்கல்.

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தேசிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடரில் ஐபீரிய அண்டை நாடுகளான ஸ்பெயினும், போர்த்துக்கலும் இறுதிக்கு முன்னேறி இருந்தன. வலுவான ஸ்பெயின் அணி தனது வெற்றி நடையை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அதை தகர்த்து காட்டியது கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி.

ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு முதல் கோலை பதிவு செய்தார் அந்த அணியின் மார்ட்டின் ஜூபிமெண்டி. இது சர்வதேச அளவில் அவரது இரண்டாவது கோல். இருப்பினும் அதற்கான பதில் கோலை 5 நிமிடங்களில் வலைக்குள் தள்ளியது போர்த்துக்கல். நுனோ மென்டிஸ் 26வது நிமிடத்தில் போர்த்துக்கல் அணிக்காக கோல் பதிவு செய்தார்.

பின்னர் 45வது நிமிடத்தில் மைக்கேல் ஒயர்சபல், ஸ்பெயின் அணிக்காக 2வது கோலை பதிவு செய்தார். இதன் மூலம் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் கப்டன் ரொனால்டோ கோல் பதிவு செய்தார். இது சர்வதேச அளவில் அவரது 138வது கோல். இதன் மூலம் ஆட்டம் 2-2 என சமன் ஆனது. கூடுதல் நேரத்திலும் வெற்றிக்கான கோலை எந்த அணியாலும் பதிவு செய்ய முடியவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் வகையில் பெனால்டி ஷூட்-அவுட் நடத்தப்பட்டது. இதில் 5 வாய்ப்புகளிலும் கோல் பதிவு செய்தது. போர்ச்சுகல். மறுபக்கம் ஸ்பெயின் அணி 3 கோல்களை பதிவு செய்ய நஷன்ஸ் லீக் தொடரில் 2வது முறையாக பட்டம் வென்றது போர்த்துக்கல்.

spot_imgspot_img

More like this
Related

“அம்மன் கனவில் வந்து சொன்னதால்…” – கோயிலில் மடிப்பிச்சை ஏந்தியது குறித்து நளினி விளக்கம்!

அம்மன் தன் கனவில் வந்து சொன்னதால் மடிப்பிச்சை ஏந்தியதாக நடிகை நளினி...

80 வயது மூதாட்டியின் மரண தண்டனையை இரத்து செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தால் 80 வயது மூதாட்டி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்திலேயே சாரதி அனுமதிப்பத்திரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்