கனடாவில் பயங்கரம்: யாழ்ப்பாண தமிழரை குத்திக்கொன்ற மகன்!

Date:

கனடாவின் ரொரன்டோ-ஸ்காபரோ பகுதியிலுள்ள வீட்டில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட 66 வயதுடைய ஒருவர், அவரது மகனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். 32 வயதுயை மகன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு,  முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

பிஞ்ச் அவென்யூ ஈஸ்ட் மற்றும் மெக்கோவன் சாலைக்கு அருகில் உள்ள விட்லி காசில் கிரசென்ட் வீட்டிற்கு இரவு 11 மணிக்குப் பிறகு கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக தகவல் கிடைத்ததாக டொராண்டோ பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசார் வந்தபோது, ​​​​வீட்டினுள் காயங்களுடன் 66 வயதுடைய ஒருவரைக் கண்டுபிடித்தனர் என்று டொராண்டோ பொலிசார் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் செய்தி வெளியீட்டில் தெரிவித்தனர். உயிர்காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

உயிரிழந்தவர் ரொறன்ரோவைச் சேர்ந்த குலதுங்கம் மதிசூடி என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அந்த நபரின் மகன் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாக போலீசார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இளங்கோ மதிசூடி (32) என்பவர் மீது முதல்நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் வியாழன் அன்று டொராண்டோ ஜாமீன் மையத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார்.

அவரும் அவரது குடும்பத்தினரும் புதன்கிழமை இரவு வீட்டில் இருந்ததாக பக்கத்து வீட்டு அயலவர் வியாழக்கிழமை ஊடகங்களிடம் கூறினார். மதிசூடியின் மனைவி திகைப்படைந்த நிலையில் உதவி கோரி அவர்களின் வீட்டிற்கு வந்தார்.

“அவர் வந்து எங்கள் கதவைத் தட்டினார்,” என்று அண்டை வீட்டார் மேலும் கூறினா. அவர், தனது கணவர் கத்தியால் குத்தப்பட்டதாக அவர்களிடம் கூறினார்.

மதிசூடி கடந்த 40 வருடங்களாக கனடாவில் வாழ்ந்து வருகின்றார். ஐங்கரன் வீடியோவின் உரிமையாளராவார். காதல் முறிவு காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த இளங்கோ நவம்பர் 21 நள்ளிரவு தந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக இளங்கோவின் சகோதரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

Uudet verovapaat nettikasinot Suomessa.1616

Uudet verovapaat nettikasinot Suomessa ...

Kometa онлайн казино в России регистрация и вход.5111

Kometa онлайн казино в России - регистрация и вход ...

казино онлайн 2025 где получить самые крупные выигрыши.4062

Эксклюзивный рейтинг казино онлайн 2025 - где получить самые...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்