இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Date:

இந்தியாவின் முப்படைகளிலும் அதிநவீன தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் இந்தியராணுவத்தில் ரோபோ நாய்கள் சேர்க்கப்பட உள்ளன. முதல்கட்டமாக 100 ரோபோ நாய்களை தயாரிக்க கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதில் 25 ரோபோ நாய்கள் தயார் செய்யப்பட்டு, பல்வேறு கட்ட பரிசோதனைகளும் நடத்தப்பட்டு உள்ளன. இவை விரைவில் ராணுவத்தில் இணைய உள்ளன. சீன எல்லைப் பகுதிகளில் இந்த ரோபோ நாய்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஒரு ரோபோ நாயின் எடை 51 கிலோ ஆகும். இந்த இயந்திர நாயால் 3.15 மணி நேரம் தொடர்ச்சியாக நடந்து செல்ல முடியும். ஒருரோபோவின் உடலில் 10 கிலோ வரையிலான ஆயுதங்கள், வெடிமருந்துகளை பொருத்த முடியும். ஒரு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

ரோபோ நாயின் உடலில்அதிநவீன கேமராக்கள், ரேடார்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த நாயால் கடினமானமலைப் பகுதிகளில் எளிதாக ஏறிச்செல்ல முடியும். அதிநவீன கேமராக்கள் மூலம் தீவிரவாதிகள், எதிரிகளின் நடமாட்டத்தை துல்லியமாககண்காணித்து கட்டுப்பாட்டுஅறைக்கு தகவல் அளிக்கும்.தேவைப்பட்டால் ரோபோ நாய்களில் பொருத்தப்பட்டிருக்கும் துப்பாக்கிகள் மூலம் எதிரிகளை சுட்டு வீழ்த்தவும் முடியும். சுமார்10 கி.மீ. தொலைவில் இருந்து இந்த ரோபோக்களை தானியங்கி முறையில் இயக்க முடியும்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறியதாவது: சீன ராணுவத்தில் செயற்கைநுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோ நாய்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. சீனாவின் சவாலை எதிர்கொள்ள இந்திய ராணுவத்திலும் ரோபோ நாய்கள் விரைவில் இணைக்கப்பட உள்ளன.முதல்கட்டமாக 100 ரோபோ நாய்கள்ராணுவத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. அடுத்தகட்டமாக ரூ.300 கோடியில் ரோபோ நாய்களை தயாரிக்க ஒப்பந்தம் அளிக்கப்பட உள்ளது.

இப்போதைய நிலையில் அமெரிக்கா, பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் மட்டுமே ஜெட்பேக்கை பயன்படுத்துகின்றனர். இந்த நாடுகளை அடுத்து இந்திய ராணுவத்திலும் ஜெட்பேக் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதோடு ஆளில்லாத ட்ரோன்களும் இந்தியாவின் முப்படைகளிலும் அதிக அளவில் சேர்க்கப்பட்டு வருகின்றன என நிபுணர்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

“அம்மன் கனவில் வந்து சொன்னதால்…” – கோயிலில் மடிப்பிச்சை ஏந்தியது குறித்து நளினி விளக்கம்!

அம்மன் தன் கனவில் வந்து சொன்னதால் மடிப்பிச்சை ஏந்தியதாக நடிகை நளினி...

80 வயது மூதாட்டியின் மரண தண்டனையை இரத்து செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தால் 80 வயது மூதாட்டி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்திலேயே சாரதி அனுமதிப்பத்திரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்