Site icon Pagetamil

சர்ச்சை இயக்குனர்களுடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி…

சர்ச்சை இயக்குனர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தமிழ் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் லாபம், கடைசி விவசாயி, துக்ளக் தர்பார், விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக பாலிவுட் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே இணைந்து இயக்கும் வெப் தொடரில் நடிக்க உள்ளார். இதுதவிர ராஜ் மற்றும் டீகே தயாரிக்கும் புதிய திரைப்படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷனும் நடிக்க உள்ளார்.

இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே, அண்மையில் சமந்தா நடிப்பில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப்தொடரை இயக்கி இருந்தனர். ஈழத்தமிழர் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் இந்த வெப் தொடருக்கு எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது. சர்ச்சை இயக்குனர்களின் இயக்கத்தில் வெப் தொடர், தயாரிப்பில் ஒரு படம் என நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்து நடிப்பது தமிழ் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version